ஆனந்த முகம்
UPDATED : செப் 16, 2014 | ADDED : செப் 16, 2014
கடவுள்களில் வித்தியாசமாக யானை முகம் உடையவர் விநாயகர். இவருக்கு 'சுமுகன்' என்று பெயர் உண்டு. இதற்கு 'நல்ல முகத்தை உடையவர்' என்று பொருள். அதாவது யாரிடமும் விருப்பு, வெறுப்பு காட்டாத பேரருளைத் தரக்கூடிய, ஆனந்தமான முகத்தைக் கொண்டவர் என்பது இதன் உட்கருத்து. விஷ்ணு சகஸ்ர நாமத்திலும் 'சுமுக' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.