இவர்தான் நிஜமான பொதுவுடைமைவாதி
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
சாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுவதை 'அகடவிகடம்' என்பர். இதில் கைதேர்ந்தவர் விநாயகர். உலகாளும் உமையவளும், சிவனும் ஊடல் கொண்டு ஒருவருக்கொருவர் கோபம் கொண்டால் குறும்பு செய்து இருவரையும் ஒன்று சேர்ப்பவர் விநாயகர். காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டி காவிரி நதியை ஓடச்செய்த பெருமைக்குரியவர். பிரம்மச்சாரி சிறுவனாக வந்து விபீஷணனை ஏமாற்றி ரங்கநாதரை காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தவர். திருக்கோகர்ணத்தில் ராவணனிடம் சாதுர்யமாகப் பேசி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இவர் செய்த எல்லா விளையாட்டுக்களும் சமூகநலனுக்காகத் தான். தனி உடைமையாக இருந்ததை அனைவருக்கும் உரியதாக்கி பொதுவுடைமையை உண்மையிலேயே செயல்படுத்தியது விநாயகர் மட்டுமே.