வியாதியின் பெயருடையவன்
UPDATED : அக் 14, 2011 | ADDED : அக் 14, 2011
அழகான பெயர்களைத் தேடி எண்கணித நிபுணர்களைத் தேடி அலைவது இந்தக் காலம். ஆனால், அந்தக்காலத்தில் ஒரு அசுரன், வியாதி ஒன்றின் பெயரை தனக்கு வைத்திருந்தான். அவனது பெயர் 'முயலகன்'. நடராஜரின் திருவடியின் கீழே ஒரு அசுரன் அழுந்திக்கிடப்பானே அவன் தான் இவன். அவனை முயலகன், முஸலகன், அபஸ்மார புருஷன் என்றெல்லாம் அழைப்பார்கள். 'அபஸ்மாரம்' என்றால் 'காக்கை வலிப்பு'. காக்கை வலிப்பு நோய் வந்தவனின் கைகளும், கால்களும் எப்படி இழுக்குமோ, அதே 'போஸில்' நடராஜரின் காலடியில் படுத்திருப்பான் இவன். அதனாலேயே அப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள். கால்,கை வலிப்பு தான் 'காக்கா வலிப்பு' ஆனது என்பது இன்னொரு கொசுறுத் தகவல்.