உள்ளூர் செய்திகள்

எப்போது கும்பிட்டாலும் பலன் தருபவர்

நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள் நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை விடுவித்து காத்தருள்பவரே நவக்கிரகவிநாயகர். இவர் நவக்கிரக நாயகர்களை தன் உடம்பில் அடக்கிக் கொண்டு அருள்பாலிக்கிறார். இவரை சதுர்த்திநாளில் வழிபட்டவர்கள் கிரகதோஷம் நீங்கப்பெறுவர். நவக்கிரகவிநாயகரின் நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில் குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில் ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர். வாரத்தின் எந்த நாளில் இவரை வழிபட்டாலும் பலன் ஒன்று தான்.