உள்ளூர் செய்திகள்

இதோ ஒரு அழகிய பதில்

புரட்டாசி சனியன்று உங்கள் குழந்தையுடன் கிருஷ்ணர் கோவிலுக்கு போகிறீர்கள். குழந்தை உங்களிடம், “அப்பா! கிருஷ்ணர் கோயிலுக்குப் போகிறோமே! கிருஷ்ணா என்பதன் அர்த்தம் என்ன?'' என்று கேட்கும்.உடனே நீங்கள், ''கிருஷ்ணா என்ற சொல்லில் உள்ள 'க்ருஷ்' என்றால் 'பூமி'. 'ணா' என்றால் 'விடுவிப்பவன்'. தன்னை வணங்குவோரை பூமியில் இருந்து விடுவித்து சொர்க்கம் தருபவன்,'' என்று சொல்ல வேண்டும்.உடனே குழந்தை, ''இந்த பூமியை விட்டு ஏன் போக வேண்டும். இங்கே என்ன கஷ்டம்?'' என்று கேட்கும். இதற்கு நம்மிடம் ஆயிரம் பதில்கள் இருக்கும். அதை புரிகிற மாதிரி எடுத்துச் சொல்ல வேண்டும்.உடனே குழந்தை, “இந்த கஷ்டத்தில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?” என்று கேட்கும். அதற்கு நீங்கள் ''கிருஷ்ண... கிருஷ்ண என்று சொன்னாலே போதும்'' என சொல்லுங்கள்.“அதெப்படி?” என குழந்தை கேட்கும்.அதற்கு நீங்கள், 'க்ருஷ்' என்றால் 'பூமி'. 'ண' என்றால் 'ஆனந்தம்'. 'பூமியில் வாழும் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவன்' என்றும் ஒரு பொருளும் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி நல்லதைச் செய்தால் அவன் நம்மை வாழ வைப்பான்' என்று சொல்ல வேண்டும். இந்தப் பதிலை குழந்தை, தன் நண்பர்களிடமும் சொல்லி மகிழும்.