உள்ளூர் செய்திகள்

வீட்டில் பூஜை செய்வது எப்படி?

மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையே வீட்டை சுத்தம் செய்து, காலை 8:30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். இந்நாட்களில் திருவிளக்கேற்றி, இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அந்த தெய்வங்களைக் குறித்த பாடல்களைப் பாட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், கற்கண்டு சாதம் ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். இதை குழந்தைகளுக்கு வினியோகிக்க வேண்டும். இதில் நெய் சேர்த்திருந்தால் கன்னிப்பெண்கள் சாப்பிடக்கூடாது.