மாலவன் மார்பினிலே...
UPDATED : நவ 29, 2021 | ADDED : நவ 29, 2021
திருமாலின் உக்கிர அவதாரமான நரசிம்மருக்கு அசுரனான இரண்யனைக் கொன்ற பின்னரும் கோபம் தணியவில்லை. இதையறிந்த மகாலட்சுமி கடைக்கண்ணால் நரசிம்மரைப் பார்த்தாள். இரண்யனின் மகனான பிரகலாதனும் நரசிம்மரின் அருகில் வந்தான். இருவரைக் கண்ட பின்னர் நரசிம்மர் அமைதியடைந்தார். லட்சுமியைத் தன் மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்மர் தனித்து யோக நிலையில் இருக்கும் போது மார்பில் யோக லட்சுமியாகவும், மடியில் இருக்கும் போது சாந்த லட்சுமியாகவும் தாயார் இருக்கிறாள்.