கல்யாண சுந்தரேஸ்வரர்
UPDATED : ஜூலை 10, 2016 | ADDED : ஜூலை 10, 2016
மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றாலே மீனாட்சி கல்யாணம் தான் சட்டென நினைவிற்கு வரும். அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் உள்ள உள்ள சன்னிதிக்கு 'கல்யாண சுந்தரர் சன்னிதி' என்று பெயரிட்டுள்ளனர். சுந்தரேஸ்வரர் சன்னிதியின் இரண்டாவது வடக்கு பிரகாரத்தில் இச்சன்னிதி உள்ளது. திருமணம் செய்ய இருப்பவர்கள், புதிதாக திருமணம் ஆன தம்பதியர் இந்த சன்னிதியில் வேண்டிக்கொள்ள அவர்களது இல்வாழ்க்கை சிறக்கும். இந்த சன்னிதியின் முன் மண்டபத் தூண்களில் சொக்கநாதர், திக்விஜயம் செல்லும் கோலத்தில் மீனாட்சி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், சரபேஸ்வரர், நரசிம்மர் மற்றும் அஷ்டலட்சுமி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.