அட்சய திரிதியை கனகதாரா யாகம்!
UPDATED : ஏப் 10, 2017 | ADDED : ஏப் 10, 2017
எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்குள்ள திருக்காலடியப்பன் (கிருஷ்ணன்) கோவிலில் அட்சயதிரிதியையை முன்னிட்டு கனகதாரா யாகம் நடக்கிறது.ஏப்.26ல் யாகம் துவங்குகிறது.ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில், 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்துவர். லட்சுமி யந்திரம் வைத்து 10,008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்படும்.ஏப்.28 அட்சய திரிதியை அன்று காலை தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளால் லட்சுமி, விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படும். பிரசாத நெல்லிக்கனிகளுக்கு... அலைபேசி: 0 93888 62321