மகிழ்ச்சிக்கான வழி தெரியுமா
UPDATED : அக் 27, 2017 | ADDED : அக் 27, 2017
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். அவரது வழிபாட்டு முறையில் அன்னதானம் முக்கியமானது.இவர் வடலூரில் தொடங்கிய, சத்திய தருமசாலையில் ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசிப்பிணி போக்குகிறது. ஜீவகாருண்யத்தின் பெருமையை வள்ளலார், 'ஏழைகளின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவை பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். அன்னதானம் செய்பவரை இயற்கை சக்திகள் வாழ்த்தும். வறுமை தீண்டாது. இறையருள் அவனை காத்திட தயாராக இருக்கும். மகிழ்ச்சி அவன் மனதில் குடிகொண்டிருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.