உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் கட்டிய கோவில்

சிறுவர்கள் மணலைக் கூட்டி களிமண்ணில் சுவாமி சிலை செய்து கோவில் கட்டி விளையாடுவது வழக்கம். இதுபோல், கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமியர் கட்டிய ஒரு கோவில் நிஜகோவிலாகவே மாறி விட்டது. சிறுவர்கள் கட்டிய கோவில் என்பதால் அம்பாளுக்கு 'சின்ன மாரியம்மன்' என பெயர் வந்தது. இந்த கோவில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ளது. அம்மனின் சிலை திருமுருகன் பூண்டியில் வடிவமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு கூழாங்கல்லை வைத்து வழிபட்டனர். அதுவே நாளடைவில் அம்மனாக மாறி விட்டது. திருமணமாகி 10 அல்லது 15 ஆண்டுகளாகி குழந்தையில்லாதவர்கள் கூட இக்கோவிலில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்களில் பலருக்கு குழந்தை வரம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.