கூடலழகர்
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
மதுரையில் ஒருசமயம் தொடர்ந்து மழை பெய்ய மக்கள் துன்பத்திற்கு ஆளாயினர். பெருமாளிடம் முறையிட்ட போது, நான்கு பக்கமும் மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக கூடி நின்று மக்களைக் காத்தன. அதனால் நான்மாடக்கூடல், கூடல் மாநகர் என மதுரைக்கும், பெருமாளுக்கு கூடல் அழகர் எனப் பெயர் வந்தது. இவரே 'துவரைக் கோமான்' என்னும் பெயரில் சங்கப்புலவராக இருந்துள்ளார்.