உச்சிமலையில் "லேபிள்ளையார்
உலகிலேயே மிக உயரத்தில் இருக்கும் பிள்ளையார் எங்கிருக்கிறார் தெரியுமா?இமயமலைத் தொடரில் லடாக் பகுதியில் இருக்கும் 'லே' பிள்ளையார் தான். 'லே' லடாக்கின் தலைநகரம். இங்கு பணியாற்றிய ஒரு குடும்பத்தினரின் கனவில் யானை அடிக்கடி துரத்துவது போல இருந்தது. ஒருமுறை அவர்கள் அங்குள்ள 'ஸபித்துக் காளிமாதா' கோயிலுக்கு சென்றபோது, பிள்ளையாருக்கு கோயில் கட்டும் எண்ணம் உதித்தது. அதன்பின், யானை கனவில் துரத்துவது நின்றுவிட்டது. பின் காஞ்சிப் பெரியவரின் ஆசியைப் பெற்று கோயில் திருப்பணியைத் துவக்கினர். கட்டுமானப்பொருட்களும், விக்ரஹமும் சென்னையில் இருந்து சென்றது. மிக உயரமான இடத்தில் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் இவர். கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரம் உள்ள இக்கோயிலை ஜுன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற காலங்களில் பனியால் சூழப்பட்டிருக்கும். 2006 ஆகஸ்ட் 4ல் இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. - ஆர்.ராமதாஸ்