வாழ்வு தரும் வல்லப கணபதி
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
விநாயகரை வழிபட்டு துவங்கும் செயல்கள் இடையூறு இல்லாமல் வெற்றி உண்டாகும். வழிபடமறந்தால், தடை ஏற்படும். அவரை வணங்காமல் திரிபுர சம்ஹாரத்திற்குப் புறப்பட்ட சிவனின் தேர் அச்சு முறிந்தது. இதை உணர்ந்த சிவன், விநாயகரை தியானித்தார். இவ்வாறு அவரை தியானித்த கோலத்திற்கு வல்லபகணபதி என்று பெயர் ஏற்பட்டது. யானைமுகமும், செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணம், மகுடம், கேயூரம் முதலிய அணிகலன்களும், மாதுளம்பழம், கதை, கரும்புவில், சக்கரம், சங்கு, பாசம்,நீலோற்பலம், நெற்கதிர், தந்தம் முதலியவற்றை கைகளில் தாங்கியும் இவர் காட்சியளிப்பார். இவரை வழிபட்டால் தடங்கல்கள் விலகி செயல்கள் வெற்றியாகும். திருமணத்தடை, வேலையின்மை, குழந்தை இல்லாமை போன்றவை நீங்கி நற்பலன் உண்டாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் வல்லபகணபதிக்கு கோயில் உள்ளது.