மகிழ்ச்சிக்கான மந்திரம்
UPDATED : ஆக 26, 2014 | ADDED : ஆக 26, 2014
''சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே'' விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்லோகத்தை நெற்றியில் குட்டிக் கொண்டு விநாயகர் வழிபாட்டில் சொல்வது வழக்கம். ''குறுக்கிடும் எல்லா இடையூறுகளையும் போக்குவதற்காக, வெண்ணிற உடை அணிந்தவரும், நான்கு கைகளைப் பெற்றவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், நிலவைப் போல குளிர்ச்சி மிக்கவரும், எப்போதும் முகத்தில் மகிழ்ச்சி கொண்டவருமான விநாயகரைத் தியானிப்போம்'' என்பது இதன் பொருள். இதைச் சொல்லி விநாயகரை வழிபட்டால், செயலில் குறுக்கிடும் தடைகள் நீங்குவதோடு, எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.- நீலக்கல் சி.என். முத்து”வாமி சாஸ்திரி