சின்ன எஜமான்
UPDATED : ஆக 26, 2014 | ADDED : ஆக 26, 2014
ஊரிலே பெரிய மனிதர்கள் என்று நாலுபேர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் மேலாக மாநிலம், நாடு என்று அவரவர் தகுதிக்கேற்ப பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் விட அகில உலகத்திற்கும் மேலானவராக உச்ச ஸ்தானத்தில் இருப்பது பரமேஸ்வரராகிய சிவபெருமானும், ராஜராஜேஸ்வரியாக இருக்கும் அம்பிகையும் தான். அவர்களின் மூத்தபிள்ளையே விநாயகர். அதாவது உண்மையிலேயே 'பெரிய இடத்துப் பிள்ளை' என்றும், 'சின்ன எஜமான்' என்றும் சொல்வதற்கு உரியவர் விநாயகர் தான். இவரை வழிபட்டாலே அவருடைய பெற்றோராகிய சிவபார்வதியும் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள்.