வாய் சிவந்தா விரதமிருக்கலாம்
UPDATED : ஆக 05, 2016 | ADDED : ஆக 05, 2016
வரலட்சுமி விரதத்துக்கு ஒரு சிறப்பு இருந்துச்சு உங்களுக்கு தெரியுமா?அந்தக் காலத்தில் வெற்றிலை, பாக்கு போடும் பழக்கம் ஆண், பெண் எல்லோரிடமும் இருந்தது. இதை சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் தான் வாய் நன்றாக சிவக்கும். ஆனால் சுண்ணாம்பு சேர்க்காமலேயே சாப்பிட்டு யாருடைய வாய் சிவக்கிறதோ, அவர் தான் வரலட்சுமி விரதம் இருக்கத் தகுதியுடையவர் என்ற மரபு இருந்தது. எவ்வளவு கஷ்டமான நிபந்தனைகளையெல்லாம் முன்னோர் கடைப்பிடித்தனர் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.