உள்ளூர் செய்திகள்

முருகனின் படைத்தளபதிகள்

பார்வதிதேவியின் அம்சமான நவரத்தின தாய்மார்கள் ஆளுக்கொன்று வீதம் ஒன்பது குழந்தைகளைப் பெற்றனர். அவர்கள் நவ வீரர்கள் எனப்பட்டனர். இவர்களில் மாணிக்கவல்லியின் மகன் வீரபாகு, முத்துவல்லியின் மகன் வீரகேசரி, புஷ்பராகவல்லியின் மகன் வீரமகேந்திரர், கோமேதகவல்லியின் மகன் வீரமகேஸ்வரர், வைடூரியவல்லியின் மகன் வீரபுரந்தரர், வைரவல்லியின் மகன் வீரராக்கதர், மரகதவல்லியின் மகன் வீரமார்த்தாண்டர், பவளவல்லியின் மகன் வீராந்தகர், நீலவல்லியின் மகன் வீரதீரர் எனப்பட்டனர். இவர்கள் சூரசம்ஹாரத்தின் போது முருகனின் படைத்தளபதிகளாக செயல்பட்டனர்.