நாக தோஷம் போக்குபவர்
UPDATED : ஆக 14, 2020 | ADDED : ஆக 14, 2020
இறந்த பாம்பின் உடலில் புகுந்து அதற்கு உயிர் கொடுத்தவர் பாம்பாட்டி சித்தர். 'நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே' என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் இவர். மருதமலையில் மலைப்பாறைகளுக்கு இடையில் இவருக்கு முருகன் காட்சி கொடுத்தார். மருதமலை கோயிலில் முருகனுக்கு பூஜை முடிந்ததும் பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை நடத்துவர். இவருக்கு இங்கு ஜீவ சமாதி உண்டு. இங்கு வழிபட்டால் நாகதோஷம், விஷபயம், தோல் நோய் குணமாகும்.