கார்த்திகை தீபங்களின் பெயர்
UPDATED : நவ 04, 2016 | ADDED : நவ 04, 2016
திருக்கார்த்திகை மற்றும் சொக்கப்பனை பற்றி மாந்திரீக பூஷணம் சாம்பசிவ குருக்கள் கூறிய கருத்து இது. சிவன் திரிபுரம் எனப்படும் அசுரர்களின் மூன்று கோட்டைகளை சம்ஹாரம் செய்தது (எரித்தது) கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஆகும். இறைவனின் புன்னகையே அக்னியாகத் தோன்றித் திரிபுரங்களை எரித்தது. இதை பாவனையாகவே காட்டவே திருவண்ணாமலை உள்ளிட்ட சிவன் கோவில்களில் தீப உற்சவத்தை நடத்துகின்றனர். இந்நாளில் முருகன் கோவில்களில் ஏற்றும் விளக்கை 'குமராலய தீபம்' என்பர். மற்ற கோவில்களிலும், வீடுகளிலும் ஏற்றும் விளக்கை 'சர்வாலய தீபம்' என்பர்.