இனி இல்லை எதிரி தொல்லை
UPDATED : ஜூலை 02, 2021 | ADDED : ஜூலை 02, 2021
திருமாலின் வலது கையிலுள்ள சக்கரத்தை 'சுதர்சனர்' என அழைப்பர். கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் இவர் மூலவராக இருக்கிறார். அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கிறார். சுதர்சனம் என்றால் 'நல்ல காட்சி' என்பது பொருள். தரிசிப்பவருக்கு பாவம் நீங்கி புண்ணியம் சேரும். சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை, கிரக தோஷம் நீங்கும். ஆனி சித்திரை நட்சத்திரத்தன்று (ஜூன் 20) பெருமாள் கோயில்களில் சுதர்சன ஜெயந்தி நடக்கும்.