உள்ளூர் செய்திகள்

உறங்கிக்கொண்டே நிர்வகிப்பவர்

மாயஜாலக்காரராக வேடிக்கைகளை நிகழ்த்துவதில் வல்லவர் என்பதால் விஷ்ணுவுக்கு 'மகாமாயன்' என்று பெயர். தமிழில் 'மாயோன்' என குறிப்பிடப்படுகிறார். இவர் செய்யும் வேடிக்கையிலேயே பெரிய வேடிக்கை, தூங்கிக் கொண்டே இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பது தான். ஊரைக் கூட்டிக் கொண்டு அரங்கத்தின் மேடையில் தூங்குகிறார். அந்த தூக்கத்தில் எழுந்த கனவாக, இந்த பிரபஞ்சம் உண்டானது. அந்த வேடிக்கை கனவில் தான், உலகின் சிருஷ்டி தத்துவங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 'அவரது கனவு கலையும் நாளில் உலகம் முடிந்து போகும்' என்கின்றனர் மகான்கள்.