உள்ளூர் செய்திகள்

காவடிகள் சொல்லும் தத்துவம்

* ஒரு உயிர் பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. சற்று வயதானால் பசுவின் பால் குடிக்கிறது. இறப்பதற்கு முன் உயிர் வதைக்கும் போது பால் ஊற்றுகிறோம். மறைந்த பிறகு சிதையிலும் பால் ஊற்றப்படுகிறது. “முருகா! என் பிறப்பு முதல் இறப்பு வரை சுமை தான். அந்தச்சுமையை தாங்குபவனாக என்னுடன் வா,” என்றழைப்பதே பால்காவடி தத்துவம்.* துன்பங்களால் சூடேறிக் கிடக்கும் மனதின் சூட்டை தணித்து வை என வேண்டுவது பன்னீர் மற்றும் சந்தனக்காவடி தத்துவம். * ''என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்,” என்று வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம்.