உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை

அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படும். இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துார். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இங்கு தான். இருவரும் பன்னிரு ஆழ்வார் பட்டியலிலும் இடம்பிடித்தவர்கள். அதனால் 'கோதை பிறந்த ஊர்', 'கோவிந்தன் வாழும் ஊர்' என்றும் சிறப்பித்து சொல்வர். 108 திவ்யதேசங்களில் மற்ற ஊருக்கு இல்லாத பெருமை இதற்கு கிடைத்துள்ளது.