டில்லியில் ராம்லீலா
UPDATED : செப் 30, 2011 | ADDED : செப் 30, 2011
மகாபாரதத்தோடு மட்டுமல்லாமல் ராமாயணத்தோடும் விஜயதசமிவிழா இணைத்துப் பேசப்படுகிறது. அம்பிகையை ஒன்பது நாட்கள் வழிபட்டு அவளது அருளாலேயே ராவணனை ராமன் வென்றார். தேவி பாகவதம் என்னும் நூலில் இந்தத் தகவல் உள்ளது. வெற்றி தினமான விஜயதசமியை டில்லியில் ராம்லீலாவாகக் கொண்டாடுகின்றனர். உலகில் உள்ள தீமைகள் அழிவதற்காக ராவணனின் உருவபொம்மையை அந்நாளில் எரித்து மகிழ்கின்றனர்.