செல்வம் பெருகணுமா... சிவ கவசம் படிங்க
UPDATED : ஜூன் 27, 2022 | ADDED : ஜூன் 27, 2022
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லுாரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் மன்னர் வரதுங்க பாண்டியர். சிவபக்தரான இவர் எழுதிய 'பிரமோத்திர காண்டம்' என்னும் நுாலில் பூஜை முறைகள், பக்தரின் இலக்கணம், பிரதோஷம், சிவராத்திரியின் சிறப்பு, விபூதி, ருத்திராட்சம், ஐந்தெழுத்தின் பெருமை பற்றி விளக்கியுள்ளார். இதிலுள்ள சிவகவசத்தை படித்தால் செல்வம் பெருகும். நல்ல சிந்தனை வளரும். வாழ்வு சிறக்கும். முக்தி கிடைக்கும்.