உள்ளூர் செய்திகள்

சாதுவுக்கு வந்த கோபம்

கவுரவர்களில் மூத்தவனான துரியோதனின் சித்தப்பா விதுரர். சாந்த குணமுள்ள இவரை 'மகாத்மா' என்பர். கோபமே வராத இவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு ரக மனிதர்கள் மீது கோபம் ஏற்பட்டது. தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும், கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்கள், வறுமையில் வாடும் போது, 'ராமா.... கிருஷ்ணா...' என திருமாலின் திருநாமத்தைச் சொல்லி வழிபடாமல், 'துன்பப்படுகிறேனே... காப்பாற்ற யாருமில்லையே' என புலம்புபவர்கள் ஆகியோர் அந்த ரகத்தினர். இவர்களின் கழுத்தில் கல்லைக் கட்டி நடுக்கடலில் தள்ளி விட வேண்டும் என்கிறார் விதுரர். கொடுக்கும் மனமும், பக்தியும் மனிதனுக்கு மிக அவசியம் என்பது அவரது கருத்து.