உள்ளூர் செய்திகள்

வானம் பார்க்கின்றாள் பூமியை காக்கின்றாள்

அம்பாள் நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ பக்தர்களை நோக்கி நேரான நிலையில் அருள்பாலிப்பது வழக்கமான ஒன்று. ஆனால், படுத்துக் கொண்டு வானத்தை நோக்கிப் பார்வையை செலுத்தும் அம்மன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள வண்டி மறிச்ச அம்மன் கோவிலில் அம்பாள் படுத்த நிலையில் காட்சியளிக்கிறாள். அம்பாள் உலக மக்களை பாதுகாப்பது போல, கீழிருந்து வானுலக தேவர்களையும் பாதுகாக்கிறாள் என்பது இதன் ஐதீகம். இந்த அம்பாளின் உயரம் 10 அடி. இது போல பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் வானத்தை நோக்கி படுத்த நிலையில் இருக்கிறாள்.