உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி விரத முறை

சிவராத்திரியன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் காலை, இரவில் பால், பழம் சாப்பிட்டு மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். 'ஓம் நமசிவாய' 'ஓம் சிவாய நம' மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இரவு சிவன் கோயிலில் நான்குகால அபிஷேகம் தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும்.மனதிற்குள், “சிவபெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும்.