தெற்கே ஒரு காமாட்சி
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலைப் போல தேனி வீரப்ப அய்யனார் கோவில் சாலையில் ஒரு காமாட்சியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் காமாட்சி அம்மன் நான்கு வேதங்கள் சூழ, ஸ்ரீசக்ர மகாமேருவுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். இங்கு தட்சிணாமூர்த்தி, நாகருடன் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் முருகன், விஷ்ணு துர்கை, தர்ம சாஸ்தாவான சாத்தாவுராயன், அஞ்சலி ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு சன்னிதிகள் உள்ளன. 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் அறக்கட்டளை கோவிலை நிர்வகிக்கிறது. தினமும் கோபூஜை உண்டு. திருமணத்தடை நீங்க, கடன் பிரச்னை குறைய, குழந்தை வரம் கிடைக்க அம்பாளை வழிபடுகின்றனர். பவுர்ணமியன்று விசேஷ பூஜையும், அஷ்டமியன்று யாக பூஜையும் நடக்கிறது.திறக்கும் நேரம்: காலை 6.3011.00 மணி, மாலை 4.30 - இரவு 7.40 மணி. அலைபேசி: 94430 54797.