ராகவேந்திரர் வழிபட்ட கோயில்
வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் உள்ளிட்ட அவதார புருஷர்கள் பலரும் வழிபட்ட தலம் தொட்டமளூர் அப்ரமேய பெருமாள் கோயில். பெங்களூரு- மைசூரு சாலையில் உள்ளது. 'அப்ரமேயர்' என்றால் ஈடு இணையில்லா அழகன்' என்று பொருள். அப்ரமேயரை விட, பிரகாரத்தில் தவழும் குழந்தையான நவநீதகிருஷ்ணருக்கே இங்கு மகிமை. சங்கீத ஞானம் மிக்க புரந்தரதாசர் பெருமாளைத் தரிசிக்க இங்கு வந்தார். வெயில் கடுமையாக இருந்ததால் கோயிலுக்கு வர தாமதமாகி விட்டது. கோயிலைச் சார்ந்தவர்கள் நடையைச் சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர். பக்தியுடன் 'ஜகத்தோத்தாரணா' என்னும் புகழ்பெற்ற பாடலைப் பாடினார். குழந்தை நவநீதகிருஷ்ணன் தன் முகத்தைத் திருப்பி அவர் வரும் திசையைப் பார்த்தான். கோயிலின் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. புரந்ததாசர் அவனது மகிமையைப் பாடி வழிபட்டார். மழலைச் செல்வம் அருளும் மகிமை மிக்கவராக இக்கண்ணன் விளங்குகிறார்.