உள்ளூர் செய்திகள்

பத்து நாள் கொண்டாட்டம்!

கேரளாவில் ஓணம் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரையில் விழா நடத்தப்படும். தங்கள் நாட்டை சிறப்புடன் ஆண்ட மன்னர் மகாபலியை வரவேற்கும் விதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர நாட்களில் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் 64 வகையான உணவு தயாரித்து சாப்பிடுவர். ஐந்தாம் நாள் அனுஷத்தன்று பாரம்பரிய முறையில் படகுப் போட்டி நடக்கும்.ஆறு,ஏழு, எட்டு, ஒன்பதாம் நாட்களான கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங் களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், மலர்களால் கோலமிடுதல், வீட்டை அலங்கரித்தல் ஆகியவற்றைச் செய்வர். பத்தாம் நாளான ஓணத்திருவிழாவன்று மூவகை பாயாசம், விருந்து உணவு செய்து விஷ்ணுவை வழிபடுவர். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையப்பன் கோயிலில், வாமனருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இக்கோயிலில் மகாபலி அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் உள்ளது.