பத்து இரவுகள் திருவிழா
UPDATED : அக் 29, 2020 | ADDED : அக் 29, 2020
கர்நாடகாவை ஆட்சி செய்த மன்னர்களின் இஷ்ட தெய்வம் மைசூரு சாமுண்டீஸ்வரி. எதிரி நாட்டின் மீது படையெடுப்பதாக இருந்தால் விஜயதசமியன்று போருக்குச் செல்வர். அம்மன் அருளால் வெற்றி வாகை சூடுவர். இதன் அடிப்படையில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. 'தஸ் ராத்' எனப்படும் இந்த விழா தற்போது 'தசரா' எனப்படுகிறது. இதற்கு 'பத்து இரவுகள்' என பொருள்.