முடிவு உங்கள் கையில்!
அக்காலத்தில் மன்னர்கள் அமைச்சர்களிடம், 'மாதம் மும்மாரி பெய்கிறதா?' என்று கேட்பார்கள். மும்மாரி என்றால் என்ன?''வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை நீதிமன்னர் நெறியினர்க்கோர் மழை மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை'' இன்று இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று முடிவு செய்து கொள்ள வேண்டியது நாம் தான்! மாதம் மும்மாரி பெய்ய ஒரு யோசனை சொல்கிறாள் ஆண்டாள். 'நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்..'' என்று திருப்பாவையில் பாடுகிறாள்.'நாங்கள்' என்றால் 'நாமாகவே விரும்பி' என பொருள். பிறர் வற்புறுத்தலுக்காக விரதம் அனுஷ்டித்தால் அதனால் பலன் ஏதுமில்லை. நாமாகவே முன்வந்து அனுஷ்டிக்கும் விரதமே பலனளிக்கும். அதிலும் மார்கழி மாதம் முப்பது நாளும் விரதமிருந்து 'ஓம் நமோ நாராயணாய' என்றும், தினமும் 108 முறை 'லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே!'' என்று அவன் திருப்பாதங்களைச் சரணடையும் மந்திரத்தையும் சொன்னால், வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையே ஏற்படும்.