உள்ளூர் செய்திகள்

சொர்க்கவசாலுக்கே கதவு போடலாம்!

விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திலும், சிவனின் இருப்பிடமான கைலாயத்திலும் மோட்சகதி பெற்றவர்கள் வாழ்வர். இந்த இரண்டையும், ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அமைந்து உள்ளது. இங்கு பெருமாள், வைகுண்டநாதர் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். நவகைலாயம் என்னும் ஒன்பது சிவத்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் கோயிலும் இங்குள்ளது. வைகுண்டநாதர் கோயிலில் வைகுண்டஏகாதசி என்று நடக்கும் மணித்துளி தரிசனம் சிறப்பானது. இதில் உற்சவர் கள்ளபிரானை, அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு சென்றதும், சந்நிதியை அடைத்து விடுவர். பிறகு சிறிது நேரத்தில் திறந்து பெருமாளுக்கு தீபாராதனை நடத்தி விட்டு, மீண்டும் சந்நிதியை அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடுவதால் 'மணித்துளி தரிசனம்' என்ற பெயர் உண்டானது. இதைத் தரிசிப்பவர்கள் நல்வாழ்வு பெறுவதோடு, பிறவி முடிந்த பின் வைகுண்டபதவி பெறும் பாக்கியத்தை அடைவதாக ஐதீகம். இங்குள்ள சொர்க்கவாசலுக்கு, தேக்கு மரத்தில் கதவுசெய்யும் திருப்பணியை அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. பக்தர்கள் இந்த திருப்பணியில் பங்கேற்கலாம்.போன்: 95004 89508, 94421 23013.