உள்ளூர் செய்திகள்

தரிசன பலன்

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா என்பது பழமொழி.பறவைகளில் அதிகமான உயரத்தில் பறப்பது பருந்து. இதன் கழுத்தில் வெள்ளைக்கோடு அகலமாக இருக்கும். இது திருமாலின் வாகனம். கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றுவர். அப்போது அங்கு கருடன் பறந்து வரும் நேரத்தை தெய்வீகமாக கருதுகின்றனர். கருடனை காலையில் தரிசனம் செய்தால் அன்றைய நாள் நன்றாக அமையும். ஒவ்வொரு நாளும் கருடனை தரிசிக்க என்ன பலன் என்பதை பார்ப்போம். ஞாயிறு - நோய்கள் குறையும்திங்கள் - குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்செவ்வாய் - மனதைரியம் கூடும்புதன் - புத்தி கூர்மையாகும்வியாழன் - ஆயுள் விருத்தி உண்டாகும்வெள்ளி - பணம், செல்வம் சேரும் சனி - மோட்சம் கிடைக்கும்