விரதம் இருக்கும் முறை
UPDATED : ஆக 17, 2022 | ADDED : ஆக 17, 2022
மகா சங்கடஹர சதுர்த்தியன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் காலையில் மட்டும் சாப்பிடலாம். பிறகு மாலையில் கோயிலில் விநாயகருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, அவருக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றலாம். பின் பிரகாரத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். வீட்டிற்கு வந்து சந்திரனை தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். அன்று முழுவதும் விநாயகர் துதி பாடல்களை சொல்வது சிறப்பு. பிடித்த பிரசாதம்விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது மோதகக் கொழுக்கட்டை. அது தவிர அப்பம், சுண்டல், வடை, அவல், பொரிகடலையும் அவருக்கு பிடிக்கும். அதோடு வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், ஆப்பிள் போன்றவைகளையும் படைத்து அவரை வழிபடலாம்.