உலகமே சிவம்
UPDATED : அக் 14, 2020 | ADDED : அக் 14, 2020
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது உலகம். பிரபஞ்சம் என்பதற்கு 'கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து' என்பது பொருள். இயற்கையும் கடவுளும் ஒன்றே என்ற அடிப்படையில் சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களை உருவாக்கினர். இங்கு வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகியவை.