அழகாய் இருக்க மந்திரம் இருக்கு!
UPDATED : மே 19, 2017 | ADDED : மே 19, 2017
தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்ற பெயர் வருகிறது. சிவனுக்கு 'கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்' என்ற பெயர்கள் உண்டு. திருமால் 'சுந்தர ராஜப் பெருமாள்' என்ற பெயர் பெறுகிறார். ராமதூதனான அனுமன் இளமையில் மிக அழகாக இருப்பார். இதனால் இவரது தாய் அஞ்சனை தன் மகனை 'சுந்தரா' என அழைத்து மகிழ்வார். இந்த மூன்று சுந்தரர்களுக்குரிய மந்திரங்களான 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஸ்ரீராமதாச ஆஞ்சநேய' ஆகியவற்றை தினமும் சொல்லி வருபவர்களின் முகம் பொலிவாக இருக்கும்.