உள்ளூர் செய்திகள்

முக்கண் அம்பாள்

அம்பிகையின் பல வடிவங்களில், ராஜ ராஜேஸ்வரி கோலமும் ஒன்று. இவள் மகாராணிபோல சிம்மாசனத்தில் கொலு வீற்றிருப்பாள். அஷ்ட மாதாக்களான பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி, மகாலட்சுமி ஆகியோர் இவளைச் சூழ்ந்து நின்று சேவை செய்வர். சிவாம்சமான இவள் சந்திரப்பிறையைத் தாங்கியிருப்பாள். தாமரை போன்ற இருகண்களோடு, நெற்றியில் ஒரு கண்ணும் இருக்கும். தாமரை, அசோகு, மா, முல்லை, நீலோற்பலம் என்னும் ஐந்து மலர் பாணங்கள், கரும்பு வில் ஏந்தி கருணையே உருவான தாயாக இருந்து வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவாள். இவளை வழிபடுவோருக்கு சுகபோகத்துடன் கூடிய ராஜவாழ்வு உண்டாகும். கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.