உருண்டே கிரிவலம் வந்தவர்
UPDATED : நவ 26, 2012 | ADDED : நவ 26, 2012
திருண்ணாமலையை நடந்து வலம் வருவதற்குள்ளாகவே கால் வலிக்க ஆரம்பிக்கும். ஆனால், அண்ணாமலை சுவாமி என்பவர், அங்கப்பிரதட்சணம் செய்து மலையை வலம் வருவார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இவர், 'சிவாயநம, ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை ஜெபித்தபடியே பிரதட்சணம் செய்வது வழக்கம். நாயன்மார் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். கார்த்திகைதிருவிழாவின் ஆறாம்நாள் நடக்கும் அறுபத்துமூவர் விழாவில், தான் கட்டிய மடாலயத்தில் அன்னதானமும் செய்தார்.