உள்ளூர் செய்திகள்

மூலவரே வீதியுலா

திருப்பதியில், பிரம்மோற்ஸவ காலத்தின் ஐந்தாம் நாளில் சிறிது நேரம் நடை அடைக்கப்படும். அன்று ஏழுமலையான் லட்சுமி ஆரம் சூடி கருட வாகனத்தில்பவனி வருவார்.அதாவது, மூலவரே பவனி வருவதாக ஐதீகம் என்பதால் சிறிது நேரம் நடை அடைக்கிறார்கள். கூட்டம் அதிகம் வராத அந்தக்காலத்தில், சுவாமி பவனி முடியும் வரை நடை அடைக்கப்படது. ஆனால், காரைக்குடி கொப்புடை அம்மன் கோயிலில், மூலவரே திருவீதி உலா வருகிறாள். பொதுவாக, உற்சவர் சிலைகளை அம்மன் கோயிலில் பவனி வரும். ஆனால், இங்கு மூலவரே பவனிவருவது விசேஷத் திலும் விசேஷம்.