வாசல் தேடி வரும் வெங்கடேசர்
UPDATED : செப் 30, 2020 | ADDED : செப் 30, 2020
புரட்டாசி சனியன்று (செப்.26, அக்.3,10) மாவிளக்கு ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். இதற்காக திருப்பதி செல்ல வேண்டாம். உங்கள் வீட்டிலேயே செய்யலாம். திருப்பதி ஏழுமலையான் படத்திற்கு முன்பு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்து, வெங்கடேச ஸ்தோத்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படியுங்கள். உங்கள் வீடு தேடி திருப்பதி ஏழுமலையான் வருவார்.