உள்ளூர் செய்திகள்

வெற்றித்திருநாள்

மனிதனுக்கு உதவும் அனைத்தும் ஆயுதங்கள் என்று போற்றப்படும். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தவே ஆயுதபூஜை கொண்டாடுகிறோம். உயிர்ப் பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற கடவுள் இருக்கிறார். வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் கடவுளாக நினைத்து வணங்குவதே ஆயுதபூஜை. இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இந்நாளில் வேண்டிக் கொள்ளலாம். இதைப்போல் மகிஷாசுரனை வென்ற துர்கை தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாகவும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த அசுரனை அழிக்க பராசக்தி துர்கை வடிவம் எடுத்தாள். இந்தப்போர் 9 நாட்களுக்கு நீடித்தது. பின் பத்தாம் நாளான தசமியன்று முடிவுக்கு வந்தது. இப்படி வெற்றி பெற்ற தசமியே விஜயதசமியாகும். இந்நாளில் துர்கையை வேண்டி எந்த செயலை தொடங்கினாலும் வெற்றிதான்.