உள்ளூர் செய்திகள்

மந்திரக்கோவில் கட்டுங்க! விவேகானந்தர் விருப்பம்

'ஓம்' என்ற மந்திரம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. மந்திரங்களுக்கு முன் 'ஓம்' சேர்த்து சொன்னால் (ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய) அதிக பலன் கிடைக்கும் என்கிறது மந்திர சாஸ்திரம். இதன் சிறப்பு பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தர், “விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்பிகை, சூரியன் என்னும் ஆறு தெய்வங்களை நாம் ஏற்றிருக்கிறோம். பிரணவ மந்திர வடிவமான 'ஓம்' எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானது. எனவே இந்த மந்திரத்தையே வழிபடும் வகையில், ஆன்மநேய ஒருமைப்பாட்டு கோவில்களை அமைக்க வேண்டும்,'' என்கிறார்.