இழந்தது கிடைக்கணுமா?
UPDATED : ஜூன் 02, 2017 | ADDED : ஜூன் 02, 2017
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள். இந்நாளில் (ஜூலை 4) காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்.