அட்டகாசம் என்றால் என்ன
UPDATED : டிச 30, 2021 | ADDED : டிச 30, 2021
பெண்களை பார்த்து 'அட்டகாசமா இருக்காப்பா!' என்பர் சிலர். உண்மையில் இது விளையாட்டு அல்ல. பொதுவாக வயிறுப்பகுதி மூன்றாக மடியும். அதில் இரண்டாவது மடிப்பிற்கு 'அட்டஹாசம்' என்றே பெயர். ஒருமுறை சிவனின் மாமனாரான தட்சன், மருமகனை அழைக்காமல் யாகம் நடத்தினார். இதை தடுக்க விரும்பிய தட்சனின் மகளான தாட்சாயிணி யாகத்தீயில் விழுந்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைச் சுமந்தபடி ருத்ரதாண்டவம் ஆடினார் சிவன்.அப்போது அவளின் உடலுறுப்புகள் பூமியில் 51 இடங்களில் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் எனப்பட்டன. அதில் வயிறுப்பகுதி விழுந்த இடம் அட்டஹாசம். இது மேற்கு வங்கத்திலுள்ள பிரத்யும்னம் சிருங்களாதேவி கோயிலாக திகழ்கிறது.