உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஏப்ரல் 29: அட்சய திரிதியை, வளர்பிறை சதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா இரண்டாம் நாள், மங்கையர்க்கரசி குருபூஜை.ஏப்ரல் 30: மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா மூன்றாம் நாள், சங்கர ஜெயந்தி, விரன்மீண்ட நாயனார் குருபூஜை, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உற்ஸவம் ஆரம்பம்.மே 1: சஷ்டி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா நான்காம் நாள், கச்சியப்பர் குரு பூஜை, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கும்பாபிஷேகம், திருச்செந்தூர் முருகன் உற்ஸவம் ஆரம்பம், திருக்கடையூர் சிவன் திருக்கல்யாணம்.மே 2: மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஐந்தாம் நாள், திருவள்ளூர் வீரராகவபெருமாள், திருத்தணி முருகன் பவனி.மே 3: அஷ்டமி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஆறாம் நாளில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, சிவஞான சுவாமி குரு பூஜை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் பவனி.மே 4: நவமி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஏழாம் நாள், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருச்சி, சீர்காழி சிவன் கோவில்களில் திருக்கல்யாணம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பவனி.மே 5: மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம், திருத்தணி முருகன் தேர், திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை முருகன் தங்க சப்பர பவனி, வாசவி ஜெயந்தி.