பொது இடத்தில் விநாயகர் பூஜை எப்போது துவங்கியது?
UPDATED : ஆக 26, 2014 | ADDED : ஆக 26, 2014
விடுதலைப் போராட்ட காலத்தில் தேசத்தைக் காக்க துணை நின்ற விழா விநாயகர் சதுர்த்தி. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், விநாயகர் வழிபாட்டிற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, நாட்டுப் பற்றை ஊட்டினார். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் முறையை ஏற்படுத்தியவர் இவரே. மகாராஷ்டிரா மாநிலத்தில், கணபதியை வழிபடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இங்குள்ள அஷ்டவிநாயகர் என்னும் எட்டு விநாயகர் கோயில்கள் பிரசித்தமானவை. இந்தக் கோயில்களிலும், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கோலாகலமாக நடக்கும். மகாராஷ்டிர மக்கள் விநாயகரையே முழுமுதற்கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு வழிபடுவது 'காணாபத்யம்' என்று பெயர்.