குழந்தை வரம் வேண்டுமா தையில் புனித நீராடுங்கள்!
பாவை நோன்பு நோற்கும் கன்னிப்பெண்கள், தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி மார்கழி அதிகாலையில் நீராடியதை திருப்பாவை, திருவெம்பாவை மூலம் அறிகிறோம். இதுபோல் திருமணமான பெண்கள் தங்களுக்கு குழந்தை வேண்டி 'தை நீராடல்' என்ற நிகழ்வை அக்காலத்தில் நடத்தியுள்ளனர். எந்த நீர்நிலையில் குளித்தாலும், அதை புனித தீர்த்தமாகக் கருதி பெண்கள் நீராடினர். இதற்காக அவர்கள் தவக்கோலம் கொண்ட முனிவர்கள் போல் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் மனம், தை மாத ஊற்றுத் நீர் போலத் தெளிவாக இருக்கும். கன்னியர் சிலர், இறைவனையே கணவனாக அடைய வேண்டும் என்று வேண்டியும், இந்த நீராடலைச் செய்துள்ளனர். இதை மெய்ப்பிக்கும் வகையில்,''தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?'' என்றும், ''நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய் என்மாரும்'' என்றும் சங்க இலக்கிய நூலான பரிபாடலில் வருகிறது.இன்ன பண்பின் நின் தைந் நீராடல்மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்டகன்னிமை கனியாக் கைக்கிளைக் காமஇன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்முன் முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம்;என்றும் பரிபாடலில், தைந்நீராடல் பற்றி வரிகள் உள்ளன. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் தை மாதம் அதிகாலையில் நீராடி, இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.